விருதுநகர் : நில அளவை என்பது வருவாய்துறையில் மிக முக்கியமான பணியாகும். ஒரு இடத்தை பத்திரப்பதிவு செய்கிறார் என்றால், நில அளவை சரியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் நில அளவைக்கு தற்போது ஆன்லைனில் (இசேவை மையம் மூலம்) விண்ணப்பிக்க முடியும். இந்நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகரில் நில அளவைகளை துல்லியமாக்கும் வகையில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 10 நகரங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
தமிழகத்தில் நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நில ஆவணங்களை ஆன்லைனில் பார்க்கும் வசதி, வில்லங்க சான்றிதழ்களை ஆன்லைனிலேயே வாங்கிபார்க்கும் வசதி என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நிலம் தொடர்பான வில்லங்கங்களை மக்கள் அறிய வேண்டும் என்று அரசு இந்த வசதிகளை செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம், எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற இணையவழி சேவைகளை அரசு அறிமுகம் செய்திருந்தது.இதன்படி பொதுமக்கள் தங்களது நிலம் தொடர்பான பட்டா, வரைபடம் போன்றவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடிகிறது
